/ கதைகள் / அவன் ஒரு தொடர்கதை

₹ 650

காதலை கிராமிய சூழலுடன் இணைத்து விவரிக்கும் நாவல். சேர்ந்து படித்த போது பணக்கார வீட்டு இளம்பெண்ணும், நடுத்தர குடும்ப வாலிபனும் நட்பாக பழகி, காதலர்களாக மாறுவதை சித்தரிக்கிறது. வெளி உலகை அறியாத பெண்ணை கிராமத்திற்கு அழைத்து செல்கிறான். மின்சாரம் இல்லாத ஊரில் மரங்கள் சோலையாக காட்சி தருவது புது உணர்வை ஏற்படுத்துகிறது.காதலன் பற்றிய எண்ணத்தில் பணக்கார பெண்ணுக்கு பேரதிர்ச்சி ஏற்படுகிறது. அங்கு இளம் பெண்களில் சிலர், அந்த வாலிபனை திருமணம் செய்ய காத்திருப்பதை அறிகிறாள். அவன் யாரை கரம் பிடித்தான் என்பது தான் கதை. அன்பு, பாசம், விட்டு கொடுக்கும் மனப்பான்மை போன்ற அம்சங்களுடன் எழுதப்பட்டுள்ள நாவல் நுால்.– டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை