/ கதைகள் / ஔவையார் ஆத்திசூடி கதைகள்
ஔவையார் ஆத்திசூடி கதைகள்
பழந்தமிழ் இலக்கியமான ஆத்திசூடியில் ஒவ்வொரு வரியையும் அடிப்படையாக கொண்டு புனையப்பட்ட சிறிய கதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொரு வரிக்கும் திருக்குறள், சங்க இலக்கிய பாடல்களில் இருந்து மேற்கோள் காட்டி, பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது. பிஞ்சு நெஞ்சங்களில் நீதி நெறிகள் ஆழமாக பதியும் வண்ணம் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றிலிருந்தும் நன்னெறி கதைகள் எடுத்தாளப்பட்டுள்ளன. சனி நீராடு, தக்கோன் எனத்திரி, மண் பறித்து உண்ணேல், ஒன்னாரைத் தேறேல் போன்ற ஆத்திசூடி வரிகளுக்கு சிந்தனையைத் துாண்டும் வகையில் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கு நல்லொழுக்கத்தையும், அற நெறிகளையும் கற்றுக்கொடுக்கும் பால பாடமாக பயன்படும் நுால். – புலவர் சு.மதியழகன்




