/ ஆன்மிகம் / ஆழ்வார்களும் ஆச்சாரியர்களும் (பகுதி – 2)
ஆழ்வார்களும் ஆச்சாரியர்களும் (பகுதி – 2)
பன்னிரு ஆழ்வார்களை பின்பற்றிய ஆச்சாரியர்களின் தொண்டை விவரிக்கும் நுால். பெரிய நம்பிகள் துவங்கி, வேதாந்த தேசிகர் வரை தகவல் உள்ளது. ஞானகுரு, ஐந்து அங்கத்துக்கு விளக்கம் தருகிறது. உடலாலும், மனதாலும் அரங்கனை வழிபட்ட அற்புத நெறி பற்றி விளக்குகிறது. உலகை பாதுகாக்கும் உத்தமனாகிய அரங்கன் மீது அளவில்லாத பக்தி உடையவர் திருக்கச்சி நம்பிகள் என்கிறது. ஓரிக்கை என்ற ஓர் இரவு இருக்கை ஊரின் சிறப்பு, பூவிருந்தவல்லி தலத்தின் பெருமையை வரலாற்று நிகழ்வுகளோடு விவரிக்கிறது. கூரத்து ஆழ்வார் வாழ்க்கையை தருகிறது. வைணவ ஆச்சாரியர்களை அறிந்து பெருமை கொள்ள உதவும் நுால். – புலவர் ரா.நாராயணன்