/ உளவியல் / டார்லிங் ஆக மாறுங்கள்
டார்லிங் ஆக மாறுங்கள்
அனைவருக்கும் பிடித்தமானவராக, விரும்பக் கூடியவராக இருப்பதற்கான ஆலோசனைகளை அள்ளித் தரும் நுால். மனிதனின் பெரும் சொத்துக்களாக இரண்டை காட்டுகிறது. ஒன்று கோபம்; மற்றொன்று கண்ணீர். இவற்றை அற்பமாக வெளிப்படுத்தினால் மதிப்பு குறைவதுடன், பலவீனமும் ஏற்படும் என தெரிவிக்கிறது. அவசர காலத்தில் அவகாசத்தை சில வினாடிகள் நீட்டித்து சிந்தித்தால், சரியான முடிவு எடுக்க முடியும் என புத்திமதி கூறுகிறது. ஒருவரின் மனநிலையை உடல் மொழியால் கண்டறியலாம் என உரைக்கிறது. திட்டமிட்டு அட்டவணை படுத்தாமல், வேலைகளை தள்ளிப் போடுவதை விடுத்து, அன்றாட வேலைகளை முறைப்படுத்தி பயிற்சி செய்தால், குறித்த நேரத்தில் முடித்து விடலாம் என்கிறது. படிக்க வேண்டிய நுால்.-– புலவர் சு.மதியழகன்