/ கட்டுரைகள் / நம்புங்கள் உண்மைதான்

₹ 450

வியப்பில் ஆழ்த்தும் தகவல்களின் தொகுப்பு நுால். மஹாராஷ்டிர மாநிலத்தில் கதவுகள் இல்லாத வீடுகளில் மக்களின் வாழ்க்கை முறையை கூறுகிறது. கிராமத்தில் வசித்தோர் காணாமல் போனதால் அது சுற்றுலா தலமானதை விவரிக்கிறது. இரட்டை குழந்தைகள் அதிகம் பிறக்கும் கேரள கொடிண்ணி கிராமம் குறித்த தகவல்கள் வியப்பில் ஆழ்த்துகின்றன. மேகாலயா, வேர் பாலம், மணிப்பூரில் மிதக்கும் தீவு, அசாமில் தற்கொலை பறவைகள், ஆந்திராவில் தொங்கு துாண் மரம் என விவரிக்கிறது. துாங்கிய காவலாளிகளை அறையும் பேய் பங்களா, சபிக்கப்பட்ட கோட்டை, பூனைகள் தீவு, நீர் மூழ்கி பூங்கா, அலை மலை, பனிக்கட்டி குகை பற்றியும் கூறப்பட்டுள்ளது. கோணல் காடு, கல் வனம், மரணத்திற்கு தடை விதித்த நகரம் என வினோத தகவல்கள் உடைய நுால்.– டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை