/ வரலாறு / பாரதத்தில் கலாச்சாரம் உருவான வரலாறு
பாரதத்தில் கலாச்சாரம் உருவான வரலாறு
உலகில் நாகரிகம் பரவியதை புனைவாக கூறும் நுால். செம்படவன் என்பவனை ஞானியாக ஏற்று ஒரு நாட்டை நிர்மாணிக்கிறான் மன்னன் பராந்தகன். அவன் வழி வந்த மதுரா, கோட்டை அமைத்து ஆட்சி புரிகிறான். வடக்கிலிருந்து வந்த மன்னன் பரதன் பிரமிப்புடன் பார்த்து கோட்டையை விரிவாக்கி நாகரிகத்தை பரப்பியதாக புனையப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவில் வரலாறு, தமிழில் அர்ச்சனை, செஞ்சி கோட்டை வரலாறு, தேசிங்கு, நவாப் போர்கள் பற்றி விவரிக்கப்பட்டு உள்ளது. ராமாயணம் பற்றிய செய்திகளும், நிலக்கரி, பெட்ரோல் கண்டுபிடித்த குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. வரலாற்று புனைவு நுால். – புலவர் சு.மதியழகன்




