/ வாழ்க்கை வரலாறு / பாரதியின் காளி

₹ 160

மகாகவி பாரதியின் விடுதலை சிந்தனை, சமூக சீர்திருத்த நோக்கு, காளி வழிபாட்டு நாட்டங்களை ஆய்ந்து கூறும் நுால். பாரதியின் இறை கொள்கையில் மாறுபாடுகளை காட்டுகிறது. சக்தி தரிசனம் கிட்டிய சூழல்களை முன்வைக்கிறது. உணர்வெழுச்சி மிக்க பாடல்களில் உள்ள நுட்பங்களை எடுத்து இயம்புகிறது. நாட்டின் சீர்திருத்தத்தில் பாரதியின் சீற்றத்துக்கான காரணங்களை நுட்பமாக அலசுகிறது. ஆங்கிலேயர் ஆட்சியில் பாரதி எதிர்கொண்ட சிக்கல்களை கூறுகிறது. அவரது பாடல்களில் மாறுபட்ட கருத்தோட்டங்கள் மீது துணிச்சலோடு கேள்விகளை முன்வைக்கிறது. பாரதியின் புதிய பன்னோக்கு பார்வைகள் காணக் கிடைக்கின்றன. பாரதி படைப்புகளை பல கோணங்களில் ஆராய்ந்துள்ள நுால். -– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


முக்கிய வீடியோ