Pronology The Dynamic name science (பெயர் ஒலி ஜோதிடம்)
சுரா புக்ஸ் பிரைவேட் லிமிடெட். மொழி: ஆங்கிலம். (பக்கம்: 172. விலை: ரூ.70).நமது பெருமை மிக்க பரத கண்டத்தில், வேதங்கள் மற்றும் புராணங்கள் மூலம் மனிதன் தன்னைத் தானே உணர்வதற்கும், இயற்கையோடு இயைந்து வாழ்வதற்கும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டு எப்படி எண் ஜோதிடம், வாஸ்து சாஸ்திரம் போன்றவை நம்மை நல் வழியில் நடத்த உதவும் சாதனங்கள் என்பதையும் விளக்குகிறது. பெயர் ஒலி ஜோதிடம் என்பது எண் ஜோதிடத்தைக் கடந்த ஒரு சக்தி வாய்ந்த சாதனம் என்பதை அனைவரும் அறிந்த இரண்டு மனிதர்களின் பெயர்களையும் அவற்றிற்குண்டான எண்களையும் கணக்கிட்டு பெயர் ஒலியினால் அவர்கள் எப்படி மாறுபட்டு வாழ்ந்தனர் என்பதை விளக்குகிறார்.எழுத்துக்களின் சேர்க்கையால் உண்டாகும் ஒலியை எவ்வாறு அறிவது என்பதைக் குறிப்பிட்டு இவற்றின் சேர்க்கைப் பயன்களையும் பட்டியலிட்டுள்ளார். ஆண்கள் மற்றும் பெண்களுக்கேற்றப் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் வாழ்க்கை முறைக்கு அவை எப்படி ஒலி வடிவத்தில் பொருத்தமாக இருக்கும் என்பதையும் தெளிவாக்குகிறார். இத்தகைய விஷயங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் படித்துப் பயன் பெறக்கூடிய ஒரு நல்ல நூல்.