அறிஞர் பிளேட்டோ
ஸ்ரீசெண்பகா பதிப்பகம், 24/28, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 122.).காரல்மார்க்ஸ், ரூசோ, இங்கர்சால் போன்ற சமுதாயச் சிந்தனையாளர்களுக்கு முன்னோடியாக விளங்கியவர் பிளேட்டோ என்பதை இந்த நூல் விளங்குகிறது. அறிஞர் சாக்ரடீசுக்கு விஷம் தந்ததை, தனது 28 வயதில் அவரது மாணவனான பிளேட்டோ கண்டு கொதித்தார்.உலக நாடுகள் எங்கும் பயணம் செய்தார். பாரத நாட்டிற்கும் வந்தார். ஒவ்வொரு நாட்டின் அரசியல், மக்கள், சூழலை ஆய்ந்தார். முடிவாக ஏதென்ஸ் திரும்பி "அகடமி' கல்விக் கழகம் தொடங்கினார். இதில் உருவானவர்களே வீரன் அலெக்சாண்டரும், அறிஞர் அரிஸ்டாட்டிலும்.மன்னர் பிளேட்டோவை அடிமையாக்கினான். பின் அவரது மாணவர் அவரை மீட்டுத் தன் நாடு கொண்டு சென்றார். பிறகு 80 வயதில் தன் நாட்டுக்கே மீள வந்து மாண்டார். அரசியல், குடியரசு, நீதி பற்றிய பிளேட்டோவின் கருத்துக்கள் அற்புதமானவை. இதோ சில: நீதிமானைப் போல வேடம் போடுகிற அநீதிக்காரனுக்குத் தான், அதிகார ஆற்றல் கிட்டுகிறது. அநீதியே மக்களுக்கு இயல்பான குணம்! கடவுளைக் காணிக்கை தந்து வாங்க நினைப்பவன் நாத்திகன்! முட்டாளுக்குக் கடவுள் கேளிக்கை தான்! இது பிளேட்டோ பற்றிய சுவையான பழரசம் போன்ற நூல்.