/ கவிதைகள் / பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்

₹ 55

ஸ்ரீசெண்பகா பதிப்பகம், 24/28, கிருஷ்ணா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை17. (பக்கம்: 288. விலை: ரூ.55) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் அனைத்தின் முழுமையான தொகுப்பு இந்த நூல். அவரது பாடல்களை வகைப்படுத்தி அரசியல் அறம், நாட்டு நலம், இயற்கை, தெய்வம் தேடுதல், சிறுவர் சீர்த்திருத்தம், காதல் சுவை, நகைச்சுவை, தத்துவம், தனிப்பாடல்கள் என்னும் ஒன்பது தலைப்புகளில் தந்துள்ளனர். ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் பாடல் இடம் பெற்றுள்ள திரைப்படத்தின் பெயரையும் அந்தத் திரைப்படம் வெளியான ஆண்டு ஆகிய தகவல்களைத் தந்திருப்பது ஆய்வாளர்களுக்கு உதவும். மேலும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் அனைத்தையும் அகரவரிசைப் படுத்தி அவற்றின் முதற்சொல் குறிப்பையும் அவை இடம் பெறும் பக்கங்களையும் தந்துள்ளதும் பாராட்டத்தக்கது. கவிஞர் எழுதிய இறுதிக் கவிதையையும் இந்த நூலின் இறுதியில் இடம் பெறச் செய்து அந்தக் குறிப்பையும் தெரிவித்துள்ளனர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை