/ கட்டுரைகள் / கடல், நிலம், மக்கள்
கடல், நிலம், மக்கள்
வைகறைப் பதிப்பகம், திண்டுக்கல். (பக்கம்: 112). சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இக்காலத்தில் இன்றியமையாதது. இதை 13 கட்டுரைகளாக இந்நூலில் காணலாம்.இயற்கையை காத்தல், கடலோடிகள், பாரம்பரிய தகவல்கள், கடல்சார் குறிப்புகள், கடல் பற்றிய மரபுவழி அறிவு, மீன் பிடிக்கும் முறைகள், முத்துக் குளித்தல், மீனவர் பெற வேண்டிய வளம் என ஆய்வு செய்து சொற்பொழிவாக நிகழ்த்திய கட்டுரைகள் கையடக்கப் பிரதியாக வந்துள்ளது.மீன்களின் விற்பனை, பதப்படுத்தும் முறைகள், இவை சார்ந்த பிரச்னைகள் என எல்லாவற்றையும் எடுத்துச் சொல்லும் அழகு வெகு அருமை! சிறு நூலில் சிறந்த தகவல்கள்.