/ சிறுவர்கள் பகுதி / பிரைன் ஷார்ப்னிங் ரிடில்ஸ் (ஆங்கிலம்)

₹ 50

விடுகதை, எழுத்துப் புதிர்களை தொகுத்து தரும் நுால். சிந்தனையைத் துாண்டி மூளைக்கு வேலை வைக்கிறது. பொது அறிவைப் பெருக்கி நினைவாற்றலை வளர்க்க உதவும். ஒற்றை கண்ணுடையான்; பார்க்க முடியாதவன் – அவன் யார்? நான் உயிரற்றவன்; ஆனால், எனக்கு ஐந்து விரல்கள் உண்டு – நான் யார்? இளமையாக இருக்கும் போது உயரமானவன்; முதுமையாக இருக்கும் போது மிகவும் குள்ளமாகிறேன் – நான் யார்?இப்படி புதிர்கள் நிறைந்துள்ளன. அவற்றுக்கு விடைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. புதிரை விடுவிக்கும் ஆர்வத்தைத் துாண்டுகிறது. ஆங்கில சொற்களஞ்சியத்தை பெருக்கவும் உதவும்.சலிப்பை போக்கி சுறுசுறுப்பாக்கும். ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக்க உதவும் நுால்.– புலவர் சு.மதியழகன்


சமீபத்திய செய்தி