/ ஆன்மிகம் / சென்னையில் சிவாலயங்கள்
சென்னையில் சிவாலயங்கள்
சென்னை நகரை சுற்றியுள்ள சிவன் கோவில்கள் பற்றிய அரிய செய்திகளை தொகுத்துள்ள நுால். மொத்தம், 67 தலைப்புகளில் விபரங்களை தெரிவிக்கிறது.சென்னை மல்லீசுவரர் கோவில் பற்றிய தகவலுடன் துவங்குகிறது. கோவிலின் சிறப்பு, மகத்துவம், கோவில் அமைந்துள்ள இடத்தின் புராண வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கியுள்ளது. கோவில்களில் எந்தெந்த பகுதியில் எந்த சன்னதி உள்ளது என எடுத்துரைக்கிறது.கோவிலில் பிரசித்தி பெற்ற உத்சவங்கள், பூஜைகள் மற்றும் நடைமுறைகளை அறியத் தருகிறது. குறிப்பிட்ட கோவிலின் சிறப்புக்குரிய செய்திகளும் தரப்பட்டுள்ளன. தல மரம், தீர்த்தம், விமானம் என சகல தகவல்களையும் உள்ளடக்கியுள்ளது. சென்னை கோவில்கள் பற்றிய கருவூலமாக மலர்ந்துள்ள நுால்.– ராம்