/ பொது / குறுக்கெழுத்து முப்பது
குறுக்கெழுத்து முப்பது
தமிழ் சொற்களை எளிமையாக அறிமுகப்படுத்தும் வகையில், குறுக்கெழுத்து கட்டங்களில் புதிருக்கு விடை கூறும் வகையில் அமைந்த நுால். பழந்தமிழ் நீதி நுால்கள், வரலாறு, அறிவியல், புவியியல், விளையாட்டு, சட்டம், சினிமா, பாமர மக்கள் பயன்படுத்தும் முக்கிய சொற்களை மையப்படுத்தி இதில் விளக்கங்கள் இடம் பெற்றுள்ளனன. பொது அறிவு சார்ந்த நிகழ்வுகளை நினைவில் பதிக்க உதவும் வகையில், குறுக்கெழுத்தில் புதிர்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறுக்கெழுத்து புதிருக்கு விடையும் தரப்பட்டுள்ளது. சிறுவர், சிறுமியர் பயன் பெறும் வகையில், 30 புதிர் குறுக்கெழுத்து கட்டங்கள் இடம் பெற்றுள்ளன. அகராதியை பயன்படுத்தும் பழக்கத்தை மேம்படுவதற்கும் இது உதவும். குறுக்கெழுத்து புதிர்களின் தொகுப்பு நுால். – மதி




