/ கதைகள் / தெய்வீக கதைகள்

₹ 200

புரா ணங்களை முழுமையாக படிப்பது அனைவருக்கும் முடியாத ஒன்று. அதே நேரம் அதிலுள்ள முக்கியமான ஷரத்துக்களை சிறிய கதைகளாக பிரித்து சொல்லும் போது பெரியவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். இரவில் துாங்கச் செல்லும் முன், பேரன், பேத்தியர் தங்கள் தாத்தா, பாட்டியிடம், ‘எங்களுக்கு ஏதாவது கதை சொல்லுங்களேன்...’ என ஆர்வத்துடன் கேட்பர். அப்போது, இந்நுாலில் உள்ள கதைகள் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல், பயனுள்ள அறிவுரைகளையும் வழங்கும். தெய்வீக கதைகளின் சிறப்பே அது தான். ஒருவன் பெறும் கல்வியை விட, ஒழுக்கமே சிறப்பானது என்பார் காந்திஜி. அந்த ஒழுக்கத்தை மாணவர்களுக்கு கற்று தரும் வகையில் இது போன்ற கதைகள் அமைந்துள்ளன. இப்படி, 31 கதைகள் தொகுத்து எழுதப்பட்டுள்ளன. மகாபாரதம், ராமாயணம், சிவ புராணம் உள்ளிட்ட இதிகாசம் மற்றும் காவியங்களில் இருந்து அறியாத பல தகவல்களை தேடி எடுத்து தொகுத்து எழுதப்பட்டுள்ளது. பெரியவர்களும், சிறியவர்களும் இணைந்து படிக்கும் வகையில் அமைந்துள்ளது. அபிமன்யு, சுந்தரர், தத்தாத்ரேயர் உள்ளிட்ட தெய்வ புருஷர்களும், சூர்ப்பனகை, அந்தகாசுரன் உள்ளிட்ட தீக்குணம் படைத்தோரும் இந்த புத்தகத்தில் கதையை சுமந்து வருகின்றனர். புராணக்கதை விரும்பிகளை ஈர்க்கும் வகையில் அமைந்த அருமையான புத்தகம். -– தி.செல்லப்பா


முக்கிய வீடியோ