/ கதைகள் / பல்துறையில் சுவையான குட்டிக் கதைகள் (பாகம் 1)
பல்துறையில் சுவையான குட்டிக் கதைகள் (பாகம் 1)
சுவையான செய்திகள் உடைய கதைகளின் தொகுப்பு நுால். தியானம் என்பது, இடி விழுந்தால் கூட கலையக்கூடாது என பணிப்பெண் வழியாக உணர்ந்த அக்பரின் கதை உண்மை பேசுகிறது. அமெரிக்காவை ரஷ்யா வென்றது, ஒரு மெழுகு பென்சிலால் என்பது வியப்பான செய்தியாக உள்ளது. ஹோட்டலில் சர்வராக பணியாற்றியவர் ஓபராய் குரூப் நிறுவன அதிபரானதை உழைப்பின் வெற்றியாக சொல்கிறது.இறைவனுக்கு அருகே பணி செய்வதால் சொர்க்கம் கிடைக்காது; குடும்பத்துக்கு குறைவின்றி பணி செய்தால் சொர்க்கம் கிடைக்கும் என்கிறது. திருக்கச்சி நம்பிகள் கதையும் சொல்லப்பட்டுள்ளது. பண்ணை வேலை செய்த ஆபிரகாம் லிங்கன் படிப்பை வெளிச்சமிடுகிறது. அவசியம் படிக்க வேண்டிய நுால்.– சீத்தலைச்சாத்தன்




