/ கட்டுரைகள் / தேவதாசி ஒழிப்பு போராட்டக் களங்கள்

₹ 220

சமூகத்தில் மாற்றங்களுக்காக நடந்த போராட்டங்கள் குறித்த செய்திகளை ஆவணப்படுத்தியுள்ள நுால். தென்னகத்தில் மாற்றங்களுக்கு நடந்த போராட்டச் செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன.நவசக்தி இதழில் தீண்டாமை ஒழிப்பு போராட்டக் களச் செய்திகள் ஆவணமாக பதிவு செய்யப்பட்டு உள்ளன. அதில், காந்திஜியின் கடிதங்களும், கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. பழைய இதழ் செய்திகள் உள்ளபடியே தரப்பட்டுள்ளன. நம்பகத் தன்மையை அதிகரிக்கும் விதமாக, இதழ் பக்கங்களின் ஒளி நகல்களும் இடம் பெற்றுள்ளன. சுதந்திரப் போராட்டக் காலத்தில் நடந்த சேரன்மாதேவி, வைக்கம், தேவதாசி முறை ஒழிப்பு போராட்ட வரலாறு பதிவாகி உள்ளது. சமூக மாற்றத்தில் பெரும் பங்காற்றிய நிகழ்வுகள் குறித்த ஆவண நுால்.– மதி


புதிய வீடியோ