/ வாழ்க்கை வரலாறு / தர்மத் தலைவன் தோழர் இரா.நல்லகண்ணு

₹ 245

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வாழ்க்கையை விவரிக்கும் நுால். எளிமையான அணுகுமுறையால் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து, அரசியல் மற்றும் பொது வாழ்வில், 70 ஆண்டுகளுக்கும் மேலாக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதை குறிப்பிடுகிறது. பாரதியாரின் ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே...’ என்ற சுதந்திர பள்ளுப் பாட்டை விரும்பிப் பாடுவதைக் குறிப்பிடுகிறது. கனிம கொள்ளையை எதிர்த்து போராடியது, ஜாதி ஏற்றத்தாழ்வு ஏற்படுத்தும் இரட்டை குவளை முறையை நீக்குவதற்கு போராடியது என செயல்பாடுகளை விவரிக்கிறது. தன்னிகரற்ற தலைவராக திகழ்வதை அறிந்துகொள்ள துணை செய்கிறது. அரசியல் தலைவரின் வாழ்வை எடுத்துக்காட்டும் நுால். – பேராசிரியர் ரா.நாராயணன்


முக்கிய வீடியோ