/ கவிதைகள் / தீரன் சின்னமலை தீரத்திலே பெரியமலை!
தீரன் சின்னமலை தீரத்திலே பெரியமலை!
படித்துணரும் வகையிலான கவிதைகளை உடைய தொகுப்பு நுால். இறைவன், தாய், தந்தை, நாடு, பெண்கல்வி, தமிழ், ஆசிரியர், மாணவர் எனப் பல பாடுபொருள்களோடு விரிந்துள்ளது. வாதம் வேண்டாம், தீவிரவாதம் வேண்டாம் மனிதநேயம் ஒன்றே போதும் என, நேயத்தை சொல்கிறது ஒரு கவிதை. மற்றொன்றில், ‘யாராக இருந்தாலும் ஒரு பிடிதான், இறுதியில் மண்ணில் சாயும்போது’ என வாழ்வின் உண்மையை விளக்குகிறது. அன்பு, ஒற்றுமை, தேசப்பற்றை வளர்க்கச் சொல்லும் கவிதைகள் நிறைந்துள்ளன. கணவன், தாய்மாமன், தாயின் தாலாட்டு, திருமணம், தனிமை என வாழ்வில் வரும் உறவுகள், நிகழ்வுகளை உடையது. சிந்தித்துச் செயல்படத் துாண்டும் நுால்.– முனைவர் ரா.பன்னிருகைவடிவேலன்