/ கதைகள் / என் கரங்கள் கறை படாதவை
என் கரங்கள் கறை படாதவை
வாழ்க்கை அனுபவங்களையும், உலகியல் நடப்புகளையும் மையக்கருத்தாக உடைய சிறுகதைகளின் தொகுப்பு நுால். முதல் கதையே புத்தகத்தின் தலைப்பாக அமைந்துள்ளது. நேர்மையாக உழைத்த அரசு அலுவலர், ஓய்வூதியம் மற்றும் இதர பணப்பலன் பெற எடுத்த முயற்சியை கூறுகிறது. கதையில் முதன்மை கதாபாத்திரம் நேர்மையான அதிகாரி, கறை படியாத கைகள் என்று குறிப்பிடுகிறது. ‘பஞ்சாயத்து’ என்ற கதையில் பஞ்சாயத்து தலைவரின் முறையற்ற செயலை தெரிவிக்கிறது. மாற்றுத் திறனாளிக்கு துணையாய் இருந்த நிகழ்வை, ‘துணை’ என்ற கதை விவரிக்கிறது. ஏமாற்றுவோர் உலகில் உண்டு என்பதை, ‘ரயில் பிரயாணம்’ விளக்குகிறது. எளிய கருத்துகளுடன் இனிய நடையில் உருவாக்கப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். – புலவர் ரா.நாராயணன்




