/ புத்தக மதிப்புரை / எத்தனை ஜென்மமோ வாழ்க்கை என்பது...

₹ 450

சொந்த வாழ்க்கையை திரும்பி பார்த்து, அனுபவங்கள் வழியாக நினைவுகளை பதிவு செய்துள்ள நுால். சுவையான கருத்துக்கள் அள்ளித் தரப்பட்டுள்ளன. கிராம வாழ்க்கை 1960களில் எப்படி இருந்தது என்பதை இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. அரசியல், சினிமா சம்பந்தமான செய்திகள் அதிகமாக இருக்கின்றன. அவற்றில் இணைந்திருந்த நட்பு பற்றிய செய்திகள் அவசியமானவை. முதுமையும், உடல் நலக்கேடும் ஆரோக்கியத்தைக் கெடுக்கிறது. இதற்கு மாற்றாக என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனை வெளிப்பட்டுள்ளது. உணர்ச்சிவசத்தில் முடிவெடுப்பதில் ஏற்படும் பின்னடைவுகளை சுட்டிக்காட்டி, அறிவால் சிந்திக்கும் வழிமுறைகளை முன்வைக்கிறது. ஒரு திரைப்படம் பார்ப்பது போன்ற நுால். – சீத்தலைச்சாத்தன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை