/ வரலாறு / ஏழு நகர வாழ்த்து

₹ 150

நகரத்தார் திருமண வாழ்த்து அடங்கிய ஓலைச்சுவடி பதிப்பு வரலாற்றை தரும் நுால். திருமணத்தில் போக்குவரத்திற்கு மாட்டு வண்டி பயன்படுத்தியதை எடுத்துக் கூறுகிறது. பொழுதுபோக்குக்கு சதிர் கச்சேரி நடத்தப்பட்டதை தெரிவிக்கிறது. திருமண வீட்டின் முகப்பில் அமைந்த ஓலைப்பந்தலின் சிறப்பை தெளிவுபடுத்துகிறது. பெண்ணுக்கு சீதனம் வழங்கும் நடைமுறையை காட்டியுள்ளது. இவ்வாறு கொடுப்பதை கண்டித்து, ‘பெண் விலை’ என செய்யுள் படைக்கப்பட்டுள்ளதை குறிப்பிடுகிறது. பழமையான ஓலைச்சுவடி கட்டில் உள்ள எல்லா பக்கங்களும் வரிசையாக அச்சு வடிவம் பெற்றுள்ளன. சுவடிகளில் குறிப்பிட்டுள்ள பொருள், புரிய இயலாத நிலையிலும் வடிவ நேர்த்தியுடன் விளக்கப்பட்டுள்ளன. சுவடிப்பதிப்பு நுால். – முகிலை ராசபாண்டியன்


புதிய வீடியோ