/ வரலாறு / லெமூரியாவிலிருந்து சென்னை வரை
லெமூரியாவிலிருந்து சென்னை வரை
தமிழக வரலாற்று தகவல்களை தெரிவிக்கும் நுால். லெமூரியா கண்டம் என்ற கருத்தின் அடிப்படையையும் உள்ளடக்கியுள்ளது. சங்க காலத்தில் மதங்களின் தாக்கம், பவுத்த, ஜைன மதங்களின் வளர்ச்சி, களப்பிரர் கால செய்திகள், சைவம், வைணம் மறுமலர்ச்சி பெற்ற விபரங்கள் தரப்பட்டுள்ளன. சேர, சோழ, பாண்டியர் அரசுகள் மறுமலர்ச்சி பெற்றது, கோவில்கள் அமைத்தது எடுத்துரைக்கப்பட்டுள்ளது. செட்டிநாடு உருவான கதை, விஜயநகர ஆட்சி, ஐரோப்பியர் வருகை, கிறிஸ்துவ சமய வளர்ச்சி பற்றிய செய்திகளும் தரப்பட்டுள்ளன. தமிழகத்துக்கு கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாம் அளித்த பங்களிப்புகள் குறித்து கூறப்பட்டுள்ளது. நாடு விடுதலையடைந்தது முதல், தற்காலம் வரை உள்ள வரலாற்றை தரும் நுால். – மதி




