/ கட்டுரைகள் / காந்தியும் சுற்றுச்சூழலும்
காந்தியும் சுற்றுச்சூழலும்
சுற்றுச்சூழல் சீரழிவது குறித்து காந்திஜி கூறிய கருத்துகளின் அடிப்படையில் அமைந்துள்ள நுால். வளர்ச்சி என்ற வடிவத்தில் இன்று சுற்றுச்சூழல் மாசுபடுத்தப்படுகிறது. எதிர்காலத்தில் உலகின் மிகப்பெரிய சவாலாக சுற்றுச்சூழல் சீர்கேடு அமையப் போகிறது. இதை அன்றே உணர்த்தும் வகையில் சுற்றுச்சூழல் மாசுபடுவதன் அபாயம், சுற்றுச்சூழல் கருத்துகளை காந்திஜி எடுத்துக் கூறியுள்ளதை சொல்கிறது இந்த புத்தகம். காந்திஜியை ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலராக நோக்கி எழுதப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை காக்கும் வகையில் காந்திஜி எப்படி வாழ்ந்து காட்டினார் என்று விளக்கப்பட்டுள்ளது. நகரமயமாக்கலுக்கு எதிராக காந்திஜியின் கொள்கை குறித்து விளக்கப்பட்டுள்ளது. காந்திய இலக்கிய நுால். – -ஜி.வி.ஆர்.,




