/ வாழ்க்கை வரலாறு / கிராமத்து நாயகர் சைகோன் கோபாலகிருஷ்ணன்

₹ 175

ஐரோப்பிய நாடான பிரான்ஸ் ராணுவத்தில் பணியாற்றிய புதுச்சேரி தமிழரின் வாழ்க்கை வரலாற்று நுால். தந்தையின் வாழ்க்கை நிகழ்வுகளை தொகுத்து எழுதி யுள்ளார் மகள். பிரான்ஸ் ராணுவ பணியை சைகோன் என்ற தீவில் ஏற்றுக்கொண்டதால், பெயருடன் அது ஒட்டிக் கொண்டதை கூறுகிறது. ராணுவ பணியிலிருந்து விடுமுறையில் வந்தபோது கண்ட பெண்ணையே சுயமரியாதை திருமணம் செய்ததும் தகவலாக கூறப்பட்டுள்ளது. இனிய இல்லற வாழ்வின் எல்லா பக்கங்களும் விளக்கப்பட்டுள்ளன. இந்திய விடுதலைக்கு முந்தைய, பிந்தைய வரலாறும் இணைந்துள்ளது. உலகில் பிரான்ஸ் ஆதிக்கத்திலிருந்த நாடுகள் பற்றிய விபரங்களையும் உடைய நுால். – -முகிலை ராசபாண்டியன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை