/ கதைகள் / பச்சை மஞ்சள் சிகப்பு
பச்சை மஞ்சள் சிகப்பு
ரயில்வே துறையில் விபத்துகளை முன்வைத்து படைக்கப்பட்டுள்ள நாவல் நுால். மலையாள மொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ரயில் போக்குவரத்து சார்ந்த அடிப்படை தகவல்களுடன் அமைந்துள்ளது. நிர்வாகத்தில் மண்டியுள்ள ஊழல், பணி உயர்வில் போட்டி மற்றும் குளறுபடியை வெளிப்படுத்துகிறது. சுயநல கும்பலின் அதிகார வெறியால், தவறான செயல்கள் நடப்பதை தோலுரித்து காட்டுகிறது. நாட்டின் உயர்வை தடுக்கும் சுயநல கும்பலை அம்பலப்படுத்தும் வகையில் அமைந்துள்ள நாவல். – ராம்




