/ கவிதைகள் / ஞானக்கிறுக்கன்

₹ 100

இயற்கை, தமிழ் மொழி பண்பாடு, தலைவர்கள் காட்டிய வழி போன்ற தலைப்புகளில் அமைந்த கவிதைகளின் தொகுப்பு நுால். சமூக சிக்கலுக்கான தீர்வு, தமிழ் மொழியை வளப் படுத்தும் வழிகள், வேளாண்மை, கலாசாரம், தேசப்பற்று பற்றிய சிந்தனையை தருகின்றன. வாழும் வழியை காட்டிய வள்ளுவரை போற்றுகிறது. நாகரிக மோகம், உழைப்பை மறந்த சோம்பல், யாரையும் மதிக்காத சண்டித் தனம், கடமை உணர்வற்ற நிலையை கண்டிக்கிறது. ‘மாற்றம் உடலுக்கு மட்டுந்தான்; மனதிற்கு இல்லை...’ என முதுமையை கொண்டாடுகிறது. வைரஸ் என்ற தீநுண்மி உயிரினம் மனித நேயத்தை மேன்மையாக வளர்த்ததாக கூறுகிறது. ‘பணம் இருப்பவன் பதுக்குவான், இல்லாதவன் பதறுவான், தேடுபவன் திண்டாடுவான்’ என பாடுகிறது. காலத்திற்கு ஏற்ற நுால். – முனைவர் மா.கி.ரமணன்


சமீபத்திய செய்தி