/ பொது / கணவன் – மனைவி கலகலப்புடன் வாழ்வது எப்படி?
கணவன் – மனைவி கலகலப்புடன் வாழ்வது எப்படி?
தம்பதியர் வாழ்வை மகிழ்வுடன் அமைத்துக் கொள்ள உதவும் நுால். மறுமலர்ச்சியுடன் வாழ அடிப்படை கணவன், மனைவி உறவு என ஆணித்தரமாகக் கூறுகிறது. அன்றாட வாழ்க்கை சவால்கள், பிரச்னைகளை சமாளிக்கும் சூட்சுமங்களை பட்டியலிடுகிறது. இயந்திர வாழ்வில் நிம்மதியைத் தேட, குடும்ப அமைதி முக்கியம் என்கிறது. தம்பதியின் மூன்றுவித உறவுநிலையை கணித்து, அவை வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்களை கணித்துக் கூறுகிறது. பெண்களை காயப்படுத்தும் சொல்லாடல்களை பேச வேண்டாம் என வலியுறுத்துகிறது. வீட்டில் உணவு தயாரிக்கும் பொறுப்பு யாருக்கு என்பதற்கு, சிறப்பான விடை சொல்கிறது. உறவுநிலையை நுட்பமாக மறுபரிசீலனை செய்து வாழ வலியுறுத்தும் அற்புத நுால்.– -டி.எஸ்.ராயன்