/ ஜோதிடம் / எளிய முறையில் திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி?

₹ 150

அதிர்ஷ்டம் உள்ள அழகான மனைவி கிடைப்பாரா என எதிர்பார்ப்போருக்கு ஏற்ற ஜாதக குறிப்பு நுால். ஏழாம் இடம், திருமண வாழ்க்கைக்கு அச்சாணி என்பதால் விரிவாக அலசப்பட்டுள்ளது. திருமண வாழ்வில் பிரச்னைகள் தோன்றுவது ஏன், தாமதிக்கும் திருமணம், திருமணமே நடக்காமல் போவது, விவாகரத்து போன்ற கேள்விகளுக்கு விடை சொல்லப்பட்டுள்ளது. ஏழில் செவ்வாய், சுக்கிரன் இருக்கும் ஆணுக்கு, எட்டில் செவ்வாய், சுக்கிரன் இருக்கும் பெண்ணை திருமணம் செய்யக்கூடாது. காரணம் என்ன என்பது புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. நாடியையும் சேர்த்து, 11 பொருத்தங்கள் சொல்லப்பட்டுள்ளன. அடிப்படை ஜோதிடம் பற்றிய புத்தகம். – சீத்தலைச்சாத்தன்


சமீபத்திய செய்தி