/ கம்ப்யூட்டர் / ஆன்லைனில் பல்வேறு பணிகளைச் செய்துகொள்வது எப்படி?
ஆன்லைனில் பல்வேறு பணிகளைச் செய்துகொள்வது எப்படி?
தகவல் தொழில் நுட்பமான இணைய தள வசதியை பயன்படுத்தி அத்தியாவசிய பணிகளை நிறைவேற்ற வழிகாட்டும் நுால். இணைய செயல்பாடு, முக்கிய இணையதள பட்டியல் என, 19 தலைப்புகளில் தகவல்கள் தரப்பட்டுள்ளன. இணையதள என்ற தொழில்நுட்ப வளர்ச்சி பற்றி தெளிவு படுத்துகிறது. அதில் அத்தியாவசிய பணிகள் பற்றியும் விளக்கம் தருகிறது. இணைய தளங்களில் சேவையை எப்படி பெறுவது என்பதை தெளிவுபடுத்தி வழிகாட்டுகிறது. ஆன்லைனில் சினிமா டிக்கெட் பெறுவது, பஸ், ரயில் பயணச்சீட்டுகள் முன்பதிவு, மின்னஞ்சலை பாதுகாப்பாக பயன்படுத்துவது போன்றவையும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இணையதள சந்தை குறித்த விபரமும் தரப்பட்டுள்ள நுால். – ராம்