வெற்றிகரமான ஏற்றுமதியாளராவது எப்படி?
தொழில் முனைவோரை, தைரியமாக ஏற்றுமதியாளராக்கும் ஆரம்பகட்ட வழிகாட்டியாக இந்த நூல் வெளிவந்துள்ளது. தமிழகத்தின் ஏற்றுமதி சாத்தியக்கூறுகள், பொருட்கள், ஏற்றுமதியாளராவதற்கான அடிப்படை தேவைகள், முக்கியமான இணையதள முகவரிகள், விலை நிர்ணயம் உள்ளிட்ட அடிப்படை விவரங்கள் அனைத்தும் தரப்பட்டுள்ளன.தமிழகத்தில், எந்தெந்த மாவட்டத்தில் என்னென்ன ஏற்றுமதி பொருட்கள் கிடைக்கின்றன; வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனர் மற்றும் எக்ஸ்போர்ட் புரமோஷன் கவுன்சில் முகவரிகள் போன்றவை தரப்பட்டு உள்ளன. ஏற்றுமதியாளர்களால், வேதமாக கருதப்படும் சர்வதேச ஏற்றுமதி ஆவணமான யூ.சி.பி.டி.சி., பற்றிய முக்கியத்துவம், மிக முக்கியமான ஏற்றுமதி ஆவணங்களைத் தயாரிக்கும் முறைகள் என, எல்லாவற்றையும் விவரமாக இந்த நூல் விவரிக்கிறது.தொழில் முனைவோருக்கு தன்னம்பிக்கை தரும் வகையில், தமிழில் இந்த நூலை எளிமையாக வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது; பயனுள்ள நூல்.கவிஞர் பிரபாகர பாபு