/ மாணவருக்காக / ஐ லவ் எக்ஸாம்ஸ்! (ஆங்கிலம்)

₹ 190

தேர்வை பயமின்றி அணுகுவதற்கான அறிவுரைகளை வழங்கும் ஆங்கில நுால். பெற்றோர் மற்றும் மாணவ – மாணவியருக்கு உதவும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளது. பொருத்தமான வரைபடங்களுடன் உயர்தர காகிதத்தில் கவரும் விதமாக உள்ளது.மொத்தம், ஐந்து தலைப்புகளில் ஆலோசனையும், அறிவுரைகளும் தரப்பட்டுள்ளன. தேர்வுக்கு தயாராவதற்கு உற்சாக மனநிலையை உருவாக்குகிறது. தேர்வுக்கு எப்படி தயாராவது என்பதை தக்க பயிற்சி முறைகளை முன்வைத்து விளக்குகிறது.நேரத்தை கணித்து நிர்வகிப்பதில் வெற்றி பெறுவதற்கு உரிய வழிமுறைகளை கற்பிக்கிறது. வெற்றி இலக்கில் பயணிப்பதற்கு வழிகாட்டுகிறது. தேர்வை பயமின்றி எதிர்கொண்டு வெற்றிப்படியில் ஏற வழிகாட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நுால்.– ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை