/ கேள்வி - பதில் / இந்தியாவைப்பற்றிய முக்கியமான பயிற்சிக் கேள்வி – பதில்கள்
இந்தியாவைப்பற்றிய முக்கியமான பயிற்சிக் கேள்வி – பதில்கள்
கேள்வி – பதில் பாணியில் தொகுத்துத் தரப்பட்டுள்ள இந்திய வரலாற்று நுால். சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுதுவோருக்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்திய மண்ணில் கி.மு.10,000 துவங்கி, கி.பி.1857 வரையிலான வரலாற்று நிகழ்வுகள் தொகுக்கப்பட்டுள்ளன. மொத்தம், 50 அத்தியாயங்களாக பகுத்துத் தருகிறது. ஒவ்வொரு பகுதியும் முறைப்படி கால வரிசையில் தரப்பட்டுள்ளன. இது தகவல்கள் எளிதாக மனதில் பதிக்க உதவும்.சிந்து சமவெளி நாகரிகம் துவங்கி, இந்திய பெருநிலப் பரப்பில் நிலவிய பண்பாடு, அரசியலை எடுத்து உரைக்கிறது. எளிய முறை கேள்வி – பதில்கள் சுலபமாக புரிய உதவுகிறது. இந்திய வரலாற்றில் தெளிவு பெற உதவும் நுால்.– ஒளி