/ வர்த்தகம் / வருமானவரி விலக்கும் வரிச் சேமிப்பு முதலீடும்
வருமானவரி விலக்கும் வரிச் சேமிப்பு முதலீடும்
மாதந்தோறும் சம்பளம் பெறுவோருக்கான வரி விலக்கு, சேமிப்பு பற்றி எளிமையாக விளக்கும் நுால். வருமான வரிச் சட்ட விளக்கத்துடன், வருமான வரி விகிதம், விலக்கை தெளிவுபடுத்துகிறது. வாகனப்படி, வேளாண் வருவாய்க்கு வரி விலக்குகளை எடுத்துரைக்கிறது. மத்திய – மாநில அரசுகள் வழங்கும் விருதுகளில் பெறும் தொகைக்கும் வரி விலக்கு உள்ளது. வரியில்லா பத்திரங்கள், அஞ்சலக சேமிப்பு திட்டம், கிசான் விகாஸ் பத்திரம் சேமிப்பு பற்றி தெரிவிக்கிறது. இணையதளம் வழியாக வரியை செலுத்தும் வழி முறையை விளக்குகிறது. கூடுதலாக செலுத்திய வரியை மீளப் பெறுதல் போன்ற தகவல்கள் அடங்கிய நுால். – முகிலை ராசபாண்டியன்