/ கட்டுரைகள் / இந்தியாவா? ஹிந்தியாவா?
இந்தியாவா? ஹிந்தியாவா?
மொழி கற்கும் உரிமை பற்றியும், எந்த மொழியையும் திணிக்கக் கூடாது என்ற கருத்தையும் வலியுறுத்தும் நுால்.தமிழகத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு நிகழ்வுகள் பற்றி விளக்குகிறது. தமிழர் பண்பாடு, வரலாறு, தமிழ்மொழியின் தொன்மை குறித்து கீழடியில் நடந்த ஆய்வுகள் வழியாக விவரிக்கிறது. உலக அளவில் செம்மொழி பட்டியலை முன்வைக்கிறது. சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு மொழிகள் செம்மொழி அந்தஸ்து பெற்றுள்ளதை அறியத் தருகிறது. வள்ளலார் தமிழை ‘தந்தை மொழி’ என குறிப்பிட்டதையும், மகாகவி பாரதி ‘தந்தையர் நாடு’ என போற்றியதையும் குறிப்பிடுகிறது. நக்கீரர் தமிழுக்கு செய்த தொண்டு பற்றி விவரிக்கிறது. தமிழ்மொழியின் சிறப்பை கூறும் நுால்.– புலவர் ரா.நாராயணன்




