/ வாழ்க்கை வரலாறு / இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல்
இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல்
இந்தியாவின் இரும்பு மனிதராக வாழ்ந்து வரலாறு படைத்த சர்தார் வல்லபாய் பட்டேல் வாழ்க்கை வரலாற்று நுால். இந்திய விடுதலைக்காக தியாகங்கள் செய்தவர். அவரது அரசியல் பணிகள், சமுதாய சீர்திருத்தம் உள்ளிட்ட தொண்டு, சிற்றரசுகளாக சிதறிக் கிடந்த இந்தியாவை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த பெருமை பற்றி கூறும் நுால். இந்திய முதல் துணை பிரதமர், முதல் உள்துறை அமைச்சர் என பல்வேறு அடையாளங்களை கொண்டிருந்தவர். இவரை பற்றி அரிய தகவல்களை எளிய நடையில் தொகுத்துள்ளார். இன்றைய இளைஞர்கள் பட்டேலை தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும். பிறப்பு முதல் இறப்பு வரை 100 குறிப்புகளாக தொகுத்துள்ளார். சிறப்புமிக்க புகைப்படங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. – சக்திமலர்