/ கட்டுரைகள் / சுவையான நிகழ்வுகளும் அவை தரும் படிப்பினைகளும்

₹ 60

வாழ்க்கை அனுபவங்களில் இருந்து கற்றவற்றை எடுத்துக் கூறும் நுால். வீட்டை சுற்றி நடக்கும் நிகழ்வுகளே படிப்பினை தரும் என்கிறது. சாலையில் இறந்த காகத்தை வழிப்போக்கர் புதைத்த நிகழ்வில் உயரிய எண்ணத்தை வெளிப்படுத்துகிறது. சாலை விபத்தில் மரணம் அடைந்தவனின் பெற்றோர், ‘குடும்பத்தை விபத்து, இழப்பிலிருந்து காத்துக் கொள்ளுங்கள்’ என போஸ்டர் ஒட்டியிருந்ததை அக்கறையுடன் காட்டுகிறது. ஜோதிடம், பேய் ஓட்டுதல் போன்ற மூடநம்பிக்கை செயல்களால் நடக்கும் விபரீதமும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அன்பு, பாசம், கருணை, மனித நேயம் போன்றவை மரித்து விடவில்லை என்பதை காட்டும் நிகழ்வுகளின் தொகுப்பு நுால். – புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை