/ அரசியல் / ஜனநாயகச் சோதனைச்சாலையில்
ஜனநாயகச் சோதனைச்சாலையில்
அரசியல் விழிப்புணர்வு, மக்கள் பொறுப்பை விளக்கி சிந்திக்க வைக்கும் சமூக- அரசியல் நுால். ஜனநாயகத்தின் அடித்தளங்கள், சீரழிவுகள் மற்றும் இந்திய அரசியலில் உள்ள சிக்கல்களை ஆராய்ந்து தகவல்களை தருகிறது.ஜனநாயக சிந்தனை வளர்ச்சி பெற்றதை வரலாற்று பின்னணியுடன் விளக்குகிறது. குற்றவாளிகள் அரசியலில் சக்தியாக உருவெடுப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. ஜாதி, மதம், வர்க்கம், மொழி என பன்முகத்தன்மையுள்ள தேசத்தில், ஜனநாயகம் கனவா, நிஜமா என கேள்வி எழுப்புகிறது.ஞானம், நடைமுறை அனுபவங்கள் மற்றும் தாராள சிந்தனைகள் தெளிவாக இடம் பெற்றுள்ளன. நேர்மையுடன் விசாரணை மனோபாவம் வளர உதவும் வகையிலான நுால்.– இளங்கோவன்