/ வாழ்க்கை வரலாறு / ஜெயலலிதாவின் மனம் திறந்து சொல்கிறேன்...
ஜெயலலிதாவின் மனம் திறந்து சொல்கிறேன்...
நடிகையாக, தமிழக முதல்வராக பன்முக ஆற்றலுடன் ஜொலித்த ஜெயலலிதாவின் பேட்டி, கட்டுரை, புத்தக வடிவம் கண்டிருக்கிறது. வாசகருடன் பேசுவது போல் எளிய நடையில் அமைந்துள்ளது.தன்னம்பிக்கையும், தைரியமும், சாதிக்கும் மனநிலையும் ஒவ்வொரு எழுத்திலும் பிரதிபலிக்கிறது. வாழ்வில் நடந்த எதையும் மறைக்காமல் கூறும் பாங்கு சுவையூட்டுகிறது. யாருக்கும் அஞ்சாத பண்பு நிறைந்துள்ளது.பள்ளி படிப்பு, நடிக்க வந்த கதை, பருவ வயதில் ஈர்ப்பு, எம்.ஜி.ஆருடன் சந்திப்புகள் படப்பிடிப்பு தளங்களில் நிகழ்ந்த சுவையான சம்பவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. தமிழக வரலாற்றில் இடம்பிடித்தவரின் வாழ்க்கை நுால்.– சி.கலாதம்பி