/ பயண கட்டுரை / கடவுளைத் தேடி வந்த கடவுள்
கடவுளைத் தேடி வந்த கடவுள்
திபெத்தியப் பகுதிகளில் பயணம் செய்த அனுபவத்தை விவரித்துள்ள நுால். இயற்கைக்காட்சிகள் அழகுற தரப்பட்டுள்ளன.லடாக்கின் தலைநகர் லெஹ் பற்றிய குறிப்பில் கிறிஸ்துவ மடாலய விபரத்தை குறிப்பிடுகிறது. அது தோன்றிய நோக்கமும் விளக்கப்பட்டுள்ளது. ஏசுநாதர் தொடர்பான கையெழுத்துப் பிரதிகளைப் பெற்று திபெத்திய மொழியில் அறிந்த வண்ணம் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.திபெத்தில் வாழும் லாமா மக்கள் வாழ்வுமுறை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அகப்புறத்தோற்றம், பாலியல் வாழ்க்கை, கிராமத்தில் பெண்கள், பலரை மணக்கும் உரிமை, ஒரு பெண் ஐந்து பேர் வரை மணக்கலாம் என்பது போன்ற தகவல்கள் வியக்கவைக்கின்றன. – ராம.குருநாதன்