/ தீபாவளி மலர் / கலைமகள் தீபாவளி மலர் 2022
கலைமகள் தீபாவளி மலர் 2022
ஆன்மிக கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் சொற்சித்திரங்களால் மிளிர்கிறது கலைமகள் வெளியிட்டுள்ள தீபாவளி மலர். புதிய செய்திகளுடன் வண்ண மயமாக திகழ்கிறது.சிருங்கேரி சங்கராச்சாரியாரின் வாழ்த்து செய்தியுடன் மலர் துவங்குகிறது. தொடர்ந்து, காஞ்சி சங்கராச்சாரியார் பற்றி, மகா பெரியவர் ஒரு பார்வை என்ற தலைப்பில், பிரபல எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் எழுதியுள்ள கட்டுரை இடம் பெற்றுள்ளது.எழுத்தாளர்கள் ராஜேஷ்குமார், மாலன், பட்டுக்கோட்டை பிரபாகர், தேவிபாலா என பலர் எழுதிஉள்ள சிறுகதைகள் மலரில் இடம் பெற்றுள்ளன. பல்வேறு தலைப்புகளில் ஆன்மிக மற்றும் பொதுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. பொருத்தமான படங்களும் மலர் முழுதும் இடம் பெற்றுள்ளன. எண்ணத்தை கவரும் வகையில் வண்ண மயமாக ஜொலிக்கிறது கலைமகள் தீபாவளி மலர்.– விநா