/ வரலாறு / களப்பிறர்களை வென்ற பாண்டியன்
களப்பிறர்களை வென்ற பாண்டியன்
வரலாற்று புதினம் போல் உள்ளத்தை கவறும் வகையில், ஏராளமான சரித்திரச் சான்றுகளோடு உருவாக்கப்பட்டுள்ள நுால். களப்பிரர் காலம் பற்றிய குறிப்பு, தமிழகத்தை ஆக்கிரமித்து வெற்றி பெற்றது, அதனால் ஏற்பட்ட சமய, சமூக மாற்றங்கள் குறித்து அலசி ஆராயப் பட்டுள்ளது. ஆசீவக மதம் பற்றிய தெளிவான தகவல்கள், கடின தேடலுக்கு சான்றாக உள்ளன. முனைவர் பட்ட ஆராய்ச்சி கட்டுரை போல் முனைப்போடு எழுதப்பட்டுள்ளது. பாண்டியன் நெடியோன் குறித்து அர்ப்பணிப்பு உணர்வுடன் தகவல்களை விரித்துரைக்கிறது. தொல்காப்பிய அரங்கேற்றம் பற்றி கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு வரியும் வைரமாய் மிளிர்கிறது. வரலாற்று பொக்கிஷமாக உருவாக்கப்பட்டுள்ள நுால். – டாக்டர் கார்முகிலோன்




