/ கதைகள் / கனவெனும் மாய சமவெளி

₹ 180

ஆர்னிகா நாசரின் விண்வெளி சிறுகதைகள் மூன்றாம் தொகுப்பின் பெயர் கனவெனும் மாய சமவெளி. இந்த பெயரில் வரும் சிறுகதை தான் செம த்ரில்லர் கதை. கனவுகளை களவாடும் கார்ப்பரேட் நிறுவனங்களைப் பற்றிய கனவு... கனவுக்குள் கிரைம்... த்ரில்லர்... கில்லர். நனவிலும் தொடரும் திகில் என பய பிராந்தியம் ஏற்படுத்துகிறது. மின்சார ஈல் மீன்களைப் பற்றிய கதை சற்றும் எதிர்பாராதது. அதன் மரபணுவை மனிதன் எப்படி பயன்படுத்தி ஜெயிக்கிறான் என்பது விறுவிறுப்பான கதை.நுாறாண்டு சமையல் இன்னும் வித்தியாசமானது. விவசாயிகளின் வயிற்றெரிச்சல், 100 ஆண்டு சமையலை என்ன கதிக்கு கொண்டு வந்து விட்டதென்பதை ஆசிரியர் விளக்குகிறார். எல்லாம் அரை நுாற்றாண்டு தாண்டி நடக்கும் நிகழ்வுகளாக விவரிக்கிறார். நாளைய சமுதாயம் உணவின்றி, தண்ணீரின்றி எப்படி தவிக்குமோ என நமக்கே பதைபதைப்பை தருகிறது இவரின் சிறுகதை தொகுப்பு.– எம்.எம்.ஜெ.,


சமீபத்திய செய்தி