/ கதைகள் / கருவறை

₹ 240

கிராமத்து சூழலில் ஒரு குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களை கொண்டு எளிமையாக கதைக்களம் அமைத்து உருவாக்கப்பட்டுள்ள நாவல் நுால். எதிர்பாராத குடும்ப சண்டையில் காதலன் இறந்து விடுகிறான். திருமணத்துக்கு முன்னரே அந்த பெண் கருவுற்று, குழந்தையை கலைக்க மறுக்கிறாள். குழந்தையை பெற்று முன்னேற்றும் துணிச்சல் பற்றியது. கருக்கலைப்பிலிருந்து தப்பி பிறக்கும் குழந்தை வளர்ந்து, அரசில் அதிகாரியாகி உயர்ந்த நிலைக்கு வருவதை சித்தரிக்கிறது கதை. குழப்பம் இல்லாமல் எளிய நடையில் கதை சொல்லப்பட்டுள்ளது. குறைந்த கதைமாந்தர்களை கொண்டு தெளிவாக அமைக்கப்பட்டுள்ளது. கருவில் குழந்தையை அழிப்பதால் உலகுக்கு ஏற்படும் பாதிப்பை அச்சத்துடன் சித்தரிக்கும் நாவல். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


முக்கிய வீடியோ