/ புத்தக மதிப்புரை / காதலிக்கும் வேலை வேண்டும்

₹ 350

காதலை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள நாவல் நுால். இது, 25 அத்தியாயங்களில் துள்ளி விளையாடுகிறது. கதாநாயகன் ஒரு டாக்டர், தோஷியை காதலிக்கிறான். அவள் மறுக்கிறாள். சந்தர்ப்பச் சூழலால் மாறுகிறாள். ரொமான்டிக்கின் அர்த்தம் படிப்பவரையும் தொற்றுகிறது. சந்தடி சாக்கில், 16 வயதினிலே படத்தில் வரும் டாக்டர் கதாபாத்திரம் நாவலில் இணைக்கப்படுகிறது. கதாநாயகன் பெற்றோர் அற்புத பாத்திரப்படைப்புகள். கதாநாயகியின் பெற்றோர் விகர்ப்ப படைப்புகள். நாயகியின் அன்பு ஏக்கத்தை, நாயகன் பூர்த்தி செய்வதை சுற்றி கதை பின்னப்பட்டுள்ளது. காதலுக்கு உதவி செய்யும் இன்பார்மராக அமைந்த கதாபாத்திரம் வழியாக விறுவிறுப்பாக நகர்த்தப்பட்டுள்ளது இந்த நாவல். – சீத்தலைச்சாத்தன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை