/ வரலாறு / கேளாத கதை
கேளாத கதை
ஆங்கிலேயருக்கு எதிராக சிறை சென்ற வ.உ.சி., வாழ்வை முன்வைக்கும் வரலாற்று ஆவண நுால். சுதேசி கப்பல் நிறுவனத்தை துவங்கி ஆங்கிலேயரை எதிர்த்தது, துாத்துக்குடியில் தொழிலாளர்களுக்காக ஆலை அதிபர்களை எதிர்த்து நின்றது, ஆங்கிலேயரை எதிர்த்து நடத்திய பிரசாரங்கள் தெளிவாக தரப்பட்டுள்ளன. ஆங்கிலேயரால் சிறையில் அடைக்கப்பட்ட பின், செயல்பட்ட விதமும் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வ.உ.சி.,க்கு எதிரான வழக்குகளில் நீதிமன்றங்களில் தாக்கல் செய்த அறிக்கைகள், ஆவணங்கள், போலீஸ் மற்றும் உளவுப் பிரிவின் விசாரணை குறிப்பு விபரங்கள் தமிழில் முதன் முறையாக தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிகழ்வும் தேதி வாரியாக நாட்குறிப்பு போல் உள்ளன. வ.உ.சி., வாழ்க்கை நிகழ்வுகளின் தொகுப்பு நுால். – சிவா




