/ கதைகள் / கிணற்றுக்குள் காவிரி

₹ 160

சுற்றி நடப்பனவற்றை கூர்ந்து கவனித்து எழுதியுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். 21 கதைகளின் தொகுப்பாக உள்ளது. கதை முடிவுகள் எதிர்பாரா திருப்பங்களைக் கொண்டுள்ளன. வாழ்க்கையை முகத்தில் அடித்துக் காட்டுவது போல் உள்ளன.சில கதைகளில், பழக்க வழக்கங்களை ஆராய்ந்து எழுதியுள்ளார். இடது கை பழக்கம், குறட்டை விடுதல் போன்றவற்றை மையப்படுத்தி மிக நுட்பமாக எழுதப்பட்டுள்ள கதைகளும் உள்ளன.நடை ஆற்றோட்டமாக அமைந்துள்ளது.வலுவான கதை அம்சங்களுடன், சம்பவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உள்ளடக்கம், உத்தியில் கதைகள் மாறுபட்ட வடிவங்களைக் கொண்டுள்ளன. கதைகளை எழுதியுள்ளவர் மருத்துவர் என்பதால் மிகவும் ஆரோக்கியமாக உள்ளது. வாசகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை