/ இசை / கோமாளிகள் வாழ்வும் இலக்கியமும்

₹ 70

ஒரு நுாற்றாண்டு காலம் ஜீவித்திருந்த ஒரு கலையைப் பற்றியும், அதை இயக்கிய கலைஞர்கள் பற்றியும் ஆய்வு செய்து தமிழர்களுக்குத் தந்திருக்கிறார் ஆர்.தங்கபாண்டியன்.கோமாளிப் பாத்திரம் நாடகத்திலும், தெருக்கூத்திலும் ஒரு முக்கியப் பாத்திரம்.சிவபெருமானைச் சனி பிடிக்கும்போது, ஒரு கபால ஓடு, சிவபெருமானின் கையைப் கவ்விக் கொண்டது. சிவனுக்காகப் படைக்கப்பட்ட எல்லா உணவையும் அந்தக் கபால ஓடு சாப்பிட்டுக் கொண்டே இருக்கும். சிவபெருமானின் உணவை கபால ஓடு சாப்பிட்டதால், அவரால் எழுந்து நடக்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நேரத்தில் கிருஷ்ண பரமாத்மா கோமாளி வேடம் பூண்டு ஆடினார்.அதைப் பார்த்து கபால ஓடு சிரிக்க, அது சிரித்ததால் கவ்வியிருந்த சிவபெருமானின் கையை விட்டுக் கீழே விழுந்தது. ஆகக் கூத்தின் முதல் கோமாளி கிருஷ்ண பரமாத்மா தான்!கோமாளி வேடதாரிகள், அடித்தட்டு மக்களில் இருந்து வந்ததாலே மறக்கப்படுகின்றனர்; அங்கீகரிக்கப் படாதவர்களாய் அனாதையாக்கப்படுகின்றனர்.பொருளாதாரத்தில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கான முன்னேற்றத்தில் எந்தக் கோமாளியும் இல்லை! போதைப் பழக்கமும், இதன் காரணமாகவே உடல் நிலை பாதிக்கப்படுவதும் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.– எஸ்.குரு


சமீபத்திய செய்தி