/ வாழ்க்கை வரலாறு / கொங்கு நாட்டு வைரங்கள்

₹ 350

கொங்கு பகுதி பிரமுகர்களின் வாழ்க்கையை உரைக்கும் நுால். ஒரு நீதிபதி எப்படி புத்திக்கூர்மையோடும், பாரபட்சமற்று, சத்தியத்தை நெஞ்சில் நிறுத்தி உத்தமமாக பணியாற்ற வேண்டும் என்பதற்கு உதாரணமாக சதாசிவனைக் காட்டுகிறது. விடுதலை வீரர் நரசிம்மலு நாயுடுவின் மேதாவிலாசம் பிரமிக்க வைக்கிறது. திவான் பகதுார் சுவாமிக்கண்ணு பிள்ளையின், 16 மொழி புலமை ஆச்சரியப்பட வைக்கிறது. கல்வெட்டு ஆய்வாளர் சுப்பிரமணிய ஐயர் பங்களிப்பு விரிவாக சொல்லப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல் நீர் மின் நிலையத்தை வெற்றிகரமாக்கிய ரத்தின சபாபதி முதலியார் வாழ்க்கை பெருமை தருகிறது. கணித மேதை ராமானுஜன் வாழ்க்கை உட்பட ஒவ்வொரு பக்கமும் வைர வரிகளை தாங்கி நிற்கும் நுால். – டாக்டர் கார்முகிலோன்


முக்கிய வீடியோ