/ வரலாறு / குயிலியின் தியாகத்தில் வேலு நாச்சியாரின் வெற்றி
குயிலியின் தியாகத்தில் வேலு நாச்சியாரின் வெற்றி
பக்கம்: 104, சிவகங்கை சீமையின் விடுதலைக்காக, வேலு நாச்சியாரின் வெற்றிக்காக, தன்னையே வெடிகுண்டாக மாற்றி, ஆயுதக் கிடங்கில் குதித்து, உயிர் நீத்த தியாகி குயிலி தான், "தீப்பாஞ்ச அம்மன் வடிவமாக வழிபடுவதாக, நூலாசிரியர் தம் ஆய்வுகள் மூலம் நிறுவ முற்பட்டுள்ளார்.காளையார் கோவில் போரில் துவங்கி, ஆயுதக் கிடங்கில் குதித்த முதல் மனித குண்டு குயிலி, ஒரு சாகசமான உளவாளி என்பது வரை, வரலாறு இதில் கதை வடிவம் பெற்றுள்ளது. இருநூறு ஆண்டுகளே ஆன, தமிழக வரலாற்றை தமிழர்கள் சரியாக பதிவு செய்யவில்லை என்று, ஆதங்கப்படும் நூலாசிரியர் ஆங்கில வரலாற்றாசிரியர்களின் குறிப்புகள் பற்றி, ஏதும் குறிப்பிடவில்லை. எனினும், அவரது ஆய்வுகள் புதிய வரலாற்றை உருவாக்கலாம்.